• Apr 26 2026

பிரபாஸ் பெயரை பச்சை குத்திய சூர்யா பட நடிகை.. விளக்கம் கொடுத்த ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் கடும் பிசியான நடிகையாக திகழ்பவர் தான் திஷா பதானி. இவர் சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா  படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.

அண்மையில் பிரபாஸ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 28 98 ஏடி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் அமிதாபச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் பிரபாஸும் திஷா பதானியும் டேட்டிங் செய்து வருவதாக பரவி வந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் திஷா பதானி கையில் குத்தி உள்ள பச்சை பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.


அதன்படி திஷா பதானி தனது கையில் PD  என பச்சை குத்தியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் P என்பது பிரபாஸையும் d என்பது திஷாவையும் குறிக்கும் என விளக்கம் கொடுத்து பதிவிட்டுள்ளார்கள். எனினும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்களா என்ற கேள்விக்கு இதுவரையில் பிரபாஸும் திஷா பதானியும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement