• Dec 26 2024

நடிகை தமன்னா கைக்கு வந்த கரண்டி.. ஈஷா சிவராத்திரியில் நடந்த சர்ப்ரைஸ்! பரவச வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்று உள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விழா நேற்றிரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காசியில் ஆரம்பித்து ராமேஸ்வரம் வரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு விழா நடைபெற்றது.

இந்தியாவில் அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.


மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, ஜக்கி வாசுதேவ் உடன் சேர்ந்து பரவசத்தோடு நடனமாடியுள்ளார். 

இந்த நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் இன்று அதிகாலை நடிகை தமன்னா, பக்தர்களுக்கு ஆசை ஆசையாக அன்னதானம் பரிமாறியுள்ளார்.தற்போது இது தொடர்பிலான வீடியோக்கள் வைரலாக உள்ளது.

இதே வேளை நடிகர் சந்தானமும் பக்தியுடன் இந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement