• Dec 26 2024

பாலிவுட்டிலும் சக்சஸ் ஆன ஜோதிகா.. ‘சைத்தான்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலிவுட்டில் நடிகை ஜோதிகா நடித்தசைத்தான்என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் முதல் நாளே வசூலை வாரி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ஜோடியாக ஜோதிகா நடித்த திரைப்படம்சைத்தான்’. மாதவன் வில்லனாக நடித்துள்ள இந்த படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட ஜோதிகா, இனி பாலிவுட் படங்களில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாலிவுட் ரீஎண்ட்ரி அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் 15 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் உலகம் முழுவதும் 22 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் இந்தி  இந்தியில்   மட்டும் தான் வெளியானது என்பதும் பிற மொழிகளில் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் இந்த படம் இந்தியில் தான் வெளியாகி உள்ளது என்றும் சப்டைட்டில் கூட போட வேண்டாம் என்று படக்குழுவினர் கூறியிருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தமிழிலும் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் அதனால் தான் தமிழகத்தில் திரையிடும் தியேட்டர்களில் சப்டைட்டில் கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது 

Advertisement

Advertisement