• Dec 26 2024

டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்த நடிகை தமன்னா... மகிழ்ச்சியில் அவர் போட்ட வைரல் பதிவு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வளர்ந்துள்ளவர் தான் நடிகை தமன்னா. அண்மையில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் நடனம் ஆட வைத்துவிட்டார்.


திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா இன்னொரு பக்கம் மிகவும் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.IMDb பக்கம் எப்போதும் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் என பல விவரங்களை வெளியிடுவார்கள். தற்போது அவர்கள் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்கள் யார் யார் என்ற லிஸ்ட் வெளியிட்டுள்ளனர்.


நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் உட்பட 10 பேர் கொண்ட அந்த லிஸ்டில் நடிகை தமன்னா 6வது இடம் பிடித்துள்ளார்.  தனது இன்ஸ்ராகிராம்   பக்கத்தில் அந்த பதிவினை போஸ்ட் செய்து இது தனக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளதாக பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement