• Dec 25 2024

புயலால் பாதிக்கப்பட்ட விலங்குகள்... கவலையில் நடிகை திரிஷா செய்த செயல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் சென்னை மக்கள் மிக்ஜாம் புயலினால் பெய்த மழையால் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களை எதிர் கொண்டனர். உண்ண உணவின்றி அருந்த நீரின்றி உறைய இடமின்றி அல்லல்பட்டனர். இந்நிலையில் மக்கள் மட்டுமன்றி மிருகங்களும் இந்த இன்னல்களினால் பாதிக்கப்பட்டன. அப்படி பாதிக்கப்பட்ட உயிர்களுக்காக வேதனைபட்டு வீடியோவை ஷேர் செய்துள்ளார் நடிகை திரிஷா.


மக்களுக்கு நிவாரண பொருட்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்து வருகிறது. இந்நிலையில் நிறைய பிரபலங்களும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.


தற்போது இந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு நிதி உதவி தருமாறு புலு குரஸ் இந்தியா தனது இணையத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது. இந்த வீடியோவை பார்த்த பிரபல நடிகை திரிஷா 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட நாய்களின் வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து தனது வேதனையை தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement