• Dec 26 2024

இலங்கையில் கோடீஸ்வரியாக திகழும் நடிகை ராதிகாவுக்கு இப்படியொரு மர்ம முடிச்சா? வெளியான தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் தான் ராதிகா. இவர் 80களில் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர். இப்போது குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

நடிகை மனோரமாவுக்கு அடுத்து பன்முக திறமை கொண்ட நடிகை என்றால் அது ராதிகா தான். நடிப்பு மட்டுமின்றி அவருடைய தைரியமான பேச்சுக்கும் பேர் போனவர்.

நடிகை ராதிகாவுக்கு முதல் திருமணம் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன் உடன் நடைபெற்றது. எனினும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


இரண்டாவது திருமணம், 1990 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு ரேயான் என்ற பெண் குழந்தை பிறந்தது.எனினும் அவரையும் விவாகரத்து செய்தார்.

இதை தொடர்ந்து மூன்றாவதாக, கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தான். 

இந்த நிலையில், தனது இரண்டாவது விவாகரத்திற்கு பிறகு ரேடான் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் ராதிகா. இதன் மூலம் சன் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை தயாரித்தார். 


அதேவேளை, இலங்கையில் ராதிகாவுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. இலங்கையில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்களின் லிஸ்டில் நடிகை ராதிகா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ராதிகாவின் அம்மா கீதாவும் இலங்கையை சேர்ந்தவர்தான். மேலும் ராதிகா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லும் விருந்தினராக இருக்கலாம் என முன்னாள் அதிபர் ராஜபக்சே சொல்லியிருந்தார். அந்த அளவுக்கு ராதிகா இலங்கையில் கோடீஸ்வரராக இருக்கிறார். 

அதே நேரத்தில், அவரது இரண்டாவது கணவர் பற்றிய எந்த விபரமும் இல்லை, ஒரு புகைப்படம் கூட இதுவரையில் சிக்கவில்லை எனலாம். அவருடைய மகள் ரேயான் கூட தன்னுடைய அப்பாவை பற்றி எதுவுமே வாய் திறந்து சொன்னது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement