• Dec 26 2024

சத்யராஜின் பாடி டிமாண்டிற்காக ரகசிய உறவில் இருந்த நடிகைகள்? திடீரென பகிரங்கப்படுத்திய பிரபலம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக எண்பதுகளில் திகழ்ந்தவர் தான் நடிகர் சத்தியராஜ்.

ஆரம்பத்தில் தயாரிப்பு பணியில் உதவியாளராக இருந்து, அதன் பிறகு தான் நடிகராக களம் இறங்கினார்.

பள்ளிக்கால நண்பர்கள் ஆன மணிவண்ணனும் சத்யராஜ்சும்  இணைந்து, பல படங்களில் பணியாற்றி இருக்கின்றார்கள். மணிவண்ணன் இயக்கிய பெரும்பாலான படங்களில் சத்யராஜ் நடித்து இருப்பார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்று சொல்வதை விட எம்.ஜி.ஆர் மீது பித்து பிடித்தவன் என்று சத்யராஜை சொல்லலாம். அந்தளவுக்கு எம்ஜிஆர் மீது வெறிகொண்டு இருந்தவர்தான் சத்யராஜ். எம்.ஜி.ஆரின் ஞாபகமாக அவர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை கேட்டு வாங்கி வைத்துள்ளாராம்.


மேலும், பெரியாரின் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து கொடுத்திருந்தாராம். அதனால் பெரியார் மீது அன்பு கொண்டிருந்த பலர், சத்யராஜுக்கு மரியாதையையும் பெற்று கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, திராவிட கழகத் தலைவர் ஆன வீரமணி, பெரியார் மோதிரத்தை சத்யராஜின் பரிசாக கொடுத்துள்ளார்.

சத்யராஜின் சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷ  மாமா, வில்லாதி வில்லன், வால்டர், வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.


இவ்வாறு திரைத்துறையில் ஒரு மதிப்புமிக்க நடிகராக இருந்த சத்யராஜை பற்றி, அண்மையில் பிரபல பத்திரிகையாளரான  பயில்வான் ரங்கநாதன்  ஒரு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதாவது, சத்யராஜ் அன்றிலிருந்து இன்று வரை  எந்த கிசுகிசுகளும் சிக்காத நடிகராக இருந்து வந்தார் என்று கூறிய பயில்வான், பாடி டிமாண்ட் என்ற ஒரு விஷயத்திற்காக மட்டுமே சத்யராஜ் பல கதாநாயகிகளுடன் உறவில் இருந்தார் என்று கூறியுள்ளார். 

ஆனால் அது அவருடைய சொந்த விஷயம் அதை பற்றி நாம் கூறக்கூடாது என்று சொன்னதோடு, ஆனாலும் கதாநாயகிகளும் அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அவரவர் சம்மதத்தினுடனையே சத்யராஜுடன் உறவில் இருந்தார்கள் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement