சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று , மனோஜ் மற்றும் விஜயா சாப்பிட்ட சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் இரண்டு பேரும் வயித்து வலியில் இருக்கின்றார்கள். இடையில் அண்ணாமலை வந்து ஏன் 2பேரும் நித்திர கொள்ளாமல் இதில வந்து இருக்கிறீங்கள் என்று கேட்டார். அதுக்கு விஜயா நாங்க சும்மா பேசிட்டிருக்கோம் என்றார். பிறகு மீனா நித்திரையா கிடந்த முத்துவை எழுப்பி அங்க மாமாவும் அத்தையும் கதைச்சு கேக்குது வாங்க போய் பாக்கலாம் என்றார்.
பிறகு அண்ணாமலை மணி 3ஆச்சு இன்னுமா உங்களுக்கு நித்திர வரல என்று கேக்கிறார். அதுக்கு மனோஜ் இல்லப்பா வயிறு கொஞ்சம் சரியில்லை என்கிறார். பிறகு முத்து வந்து அப்பா என்னாச்சு உடம்பு ஏதும் சரியில்லையா என்று கேக்கிறார். பின்னர் அண்ணாமலை முத்துக்கு சொல்லுறார் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல இவங்க 2பேருக்கும் தான் வயிறு சரியில்லை என்றார்.
அதற்கு மீனா கசாயம் வச்சுத் தருவதாக கூறினார். உடனே விஜயா ஏன்டி எதையாவது வச்சு கொடுத்து ஆள ஒரேடியா அனுப்பிடலாம் என முடிவுபண்ணிட்டியா எனக் கேட்டார். அதுக்கு மீனா அத்தை அப்புடி எல்லாம் இல்ல எங்க அம்மாக்கு கை வைத்தியம் தெரியும் அவாட்ட கேட்டுச் சொல்லுறன் என்றார். பிறகு எல்லாரும் வந்து விசாரிச்சிட்டு இருக்கினம்.
பின்னர் மீனான்ர கசாயத்தைக் குடிச்சிட்டு எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என விஜயா கூறுகிறாள். அதைத் தொடர்ந்து மீனா தன்ர மாமியாரின் கதையை பற்றி தனது குடும்பத்திற்குச் சொல்லிச் சிரிச்சுக் கொண்டிருக்கிறார். பின் அண்ணாமலையும் முத்துவும் ரோகிணியின் ஷோரூமிற்கு வந்து கதைச்சுக் கொண்டிருக்கினம். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!