• Dec 26 2024

இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம்.. கடலில் கவர்ச்சி காட்டும் அர்ஜுன் பொண்ணு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தோழிகளுடன் பாலித்தீவில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஷால் நடித்த ’பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா அர்ஜுன் அந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அடுத்த படத்தில் நடிக்கவில்லை. இருப்பினும் அவர் வேறு மொழி படங்களில் நடித்த நிலையில் தற்போது திருமணம் ஆகிய செட்டிலாக உள்ளார்.

இந்நிலையில் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை காதலித்து வந்த ஐஸ்வர்யா அர்ஜுன் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் திருமண ஏற்பாடுகளை இரு தரப்பினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் கூட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது நண்பர்களுடன் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் போட்டிங் செய்வது, ட்ராக்டரில் பயணம் செய்வது, கடலில் நடுவே படகில் கவர்ச்சியை உடைகளுடன் உட்கார்ந்திருப்பது, செல்ஃபி எடுத்துக் கொண்டு இருப்பது, விமான நிலையத்தில் நடந்து செல்வது போன்ற புகைப்படங்களையும் வீடியோவையும் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement