• Dec 26 2024

ஐஸ்வர்யாவுக்கு உதவி இயக்குநருடன் திருமணம்? தனுஷுக்கும் வேறு டீலிங் இருக்கு..! தாறுமாறாக உளறிய பிரபலம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் கேப்டன் மில்லர். இதைத்தொடர்ந்து குபேரா, இளையராஜாவின் பயோபிக், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என கிட்டத்தட்ட ஆறு படங்களை கைவைசம் வைத்துள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவராக தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர் தான் நடிகர் தனுஷ். ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்ற கௌரவம் இருந்தாலும், தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் விவாகரத்து கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதற்கு காரணம் இதுதான் என பரபரப்பு தகவல் ஒன்றை கிளப்பியுள்ளார் சந்தோஷ் ஜோசப். அதன்படி அவர் கூறுகையில்,


ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பல காதல்களில் இருந்தார்கள். அதன் பிறகு இருவரும் காதலித்தார்கள். திருமணத்திற்கு லதா குடும்பத்திலிருந்து பல எதிர்ப்பு இருந்தது. ஆனால் அதையும் தாண்டித்தான் அவர்களது திருமணம் நடந்தது. 

அதே நேரத்தில் ரஜினி குடும்பத்திலிருந்து தனுஷின் குடும்பத்திற்கு போதிய மரியாதை கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. திருமணத்துக்கு பிறகும் தனுஷ் பல காதல்களில் சிக்கி இருந்தார். ஐஸ்வர்யாவும் ஒரு நபரை காதலித்து வந்தார்.


அதன் பிறகு தற்போது அவர்கள்  பிரிந்து  உள்ளார்கள். ஐஸ்வர்யா உதவி இயக்குனருடன் பழகி வருவதாக தனுஷ் தரப்பில் இருந்து கூறினார்கள். அதற்கு ஐஸ்வர்யா தரப்பும் தனுஷ் மட்டும் என்ன யோக்கியமா என விளாசி இருந்தார். 

இன்னும் ஆறு மாதங்களில் விவாகரத்து கிடைத்துவிட்டால் தனது உறவினர் வட்டாரத்தில் இருந்து தனுஷுக்கு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என கஸ்தூரிராஜா முடிவு எடுத்துள்ளார்.

அதேபோல ஐஸ்வர்யாவுக்கும் அந்த உதவி இயக்குனரை திருமணம் செய்து வைக்க வாய்ப்பு இருப்பதாக சந்தோஷ் ஜோசப் தனது youtube தளத்தில் சொல்லியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement