தற்போது இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசுபொருளாக ட்ரெண்டிங்கில் இருப்பது 2024 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ளதாகும். இதனை தொடர்ந்தே ரசிகர்கள் சினிமாப்படங்களை இதனுடன் லிங்க் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இதுவரை இந்தியா உலக கோப்பையை வென்ற வருடங்களையும் அதே வருடத்தில் வெளியான திரைப்படங்களின் நிலவரங்களையும் ஒப்பிட்டு வருகின்றனர். அவ்வாறே குறித்த ஆண்டுகளில் வெளியாகிய அஜித்தின் படங்கள் வைரலாகின்றது.
இந்தியா 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பில்லா பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியது அதே போன்று 2011 ஆம் ஆண்டு இந்தியா வென்ற போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மங்காத்தா ஹிட் ஆகியது அவ்வாறே இம்முறையும் 2024 ஆம் ஆண்டு வென்றுள்ளது இந்தியா இந்த வருடம் அஜித்தின் விடாமுயட்சி வெளியாக உள்ளது. இதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகும் என ரசிகர்களால் கூறப்பட்டு வருகின்றது.
Listen News!