• Dec 25 2024

’குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானதற்கு இந்த 700 பேர் தான் காரணம்? அஜித் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி ’படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் எண்ணமே இயக்குனர் உள்பட படக்குழுவினர்களுக்கு இல்லை என்றும் ஆனால் அஜித் கூறியதால் தான் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்றும் கூறப்படுகிறது.

’குட் பேட் அக்லி ’படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இதில் சுமார் 700 துணை நடிகர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.

ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் 700 நடிகர்களும் அஜித்துடன் புகைப்படம் எடுக்க விரும்பினார்கள் என்றும் ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் உள்பட படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அஜித் உடன் இப்போது நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டால் இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடும் என்று பதில் கூறியதாகவும் தெரிகிறது.



இந்த நிலையில் தன்னுடன் புகைப்படம் எடுக்கும் 700 பேர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக அஜீத், இயக்குனரை அழைத்து இந்த கெட்டப்பில் உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விடுங்கள், அதன் பின் இவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் வராது என்று கூறியதாகவும், அதன் பின்னர் தான் ’குட் பேட் அக்லி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதாகவும் போஸ்டரில் உள்ள கெட்டப்பில் தான் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்துடன் நடிக்கும் நாயகி உட்பட பெரிய நட்சத்திரங்கள் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement