• Dec 25 2024

’ஆலுமா டோலுமா’ பாணியில் ஆட்டம் போட வைக்கும் அனிருத் பாடல்.. ‘விடாமுயற்சி’ செம்ம அப்டேட்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் 'வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாணியில் ஒரு அட்டகாசமான பாடலை கம்போஸ் செய்திருப்பதாகவும், அந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வேதாளம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருந்தார் என்பதும் தெரிந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு ஆலுமா டோலுமா பாடல் ஒரு முக்கிய காரணம் என்று அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்திற்காக ஆலுமா டோலுமா பாடலை விட இரு மடங்கு வேகமான ஒரு பாடலை அனிருத் கம்போஸ் செய்து முடித்திருப்பதாகவும் இந்த பாடலை கேட்டு இயக்குனர் மகிழ் திருமேனி ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நிச்சயம் இந்த பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் அஜித் - அனிருத் காம்பினேஷனில் உருவாகும் இந்த பாடல் இன்னும் சில வருடங்களுக்கு ட்ரெண்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பாடலை சிங்கிள் பாடலாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் இறுதியில் நடைபெற உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement