• Apr 08 2025

அஜித் சார் செஞ்ச பிரியானி செம டேஸ்ட்! நெகிழ்ந்து பேசிய தளபதி விஜயின் தம்பி? வறுத்தெடுக்கும் விஜய் பான்ஸ் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் MGR , சிவாஜி மற்றும் ரஜனி , கமல் ரசிகர்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டைகள் பற்றி அனைவர்க்குமே தெரியும். அவ்வாறு அவர்கள் வரிசையிலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் இரண்டாக பிரித்து வைத்திருக்கும் முன்னணி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் அவார்கள். 


இதில் அஜிதிற்கு என ஒரு தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறே அஜித்தின் சமையலுக்கென்றே சினிமா வட்டாரத்துள்ளேயே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அஜித் அருமையாக சமைப்பார் என பல சினிமா பிரபலங்கள் முன்னணி நடிகர்கள் கூறி கேள்விப்பட்டுள்ளோம். அவ்வாறே அந்த வரிசையில் விஜயின் உறவினரும் பகவதி திரைப்படத்தில் விஜயின் தம்பியாகவும் நடித்த ஜெய் சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


பல சினிமாக்களில் ஹீரோவாக நடித்த ஜெய் பொதுவாகவே பிரியாணியை அதிகம் விரும்ப கூடியவர். அவர் யூடியூப் தளம் ஒன்றில் பேர்டி கொடுக்கும் பொழுது " வெங்கட் பிரபு பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நானும் சிம்புவும் மங்காத்தா சூட்டிங் ஸ்போட்டுக்கு சென்றிருந்தோம் அப்போது அஜித் சார் எங்களுக்கு பிரியாணி செய்து தந்தார் அது மிகவும் சுவையாக இருந்தது " என கூறியுள்ளார். இதை பல விஜய் ரசிகர்கள் கலாய்த்து  வருகின்றனர்.

Advertisement

Advertisement