• Dec 26 2024

பறக்குது மானம் ! அஜித் பட ஹீரோயின் காரில் பறக்கும் படை சோதனை ! சிக்கியிருப்பாரா

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பல கட்சிகளும் தங்களது பிரச்சாரங்களை செய்வதில் மும்மரமாக உள்ளது. இந்தியாவில் வாக்குக்காக பணம் கொடுப்பது என்பது மிக மோசமாக அதிகரித்து வரும் பிரச்சனை என்பதால் குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு பறக்கும் படை என்ற ஒன்று இயங்கி வருகின்றது. அவ்வாறே பிரபல நடிகை ஒருவரின் காரை பறக்கும் படை சோதனை செய்துள்ளது.


தமிழ் , மலையாளம் , தெலுங்கு போன்ற மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் மஞ்சு வாரியரின் காரையே பறக்கும் படை சோதனை செய்துள்ளது. தமிழில் பல ஹிட் படங்களில் நடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டார். 


சமீபத்தில் அஜித்துடன்  சேர்ந்து எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்திலும் அருமையான ஆக்சன் ஹீரோயினாகவும் நடித்திருந்ததால் . "அஜித் ஹீரோயின் மானத்தை பறக்க விட்ட பறக்கும் படை" என்ற மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றது. எனினும் சோதனையில் எதுவும் கிடைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement