• Jan 02 2025

"அஜித் சார் எனக்கு பொக்கிஷம்" Good Bad Ugly பட இயக்குநர் ஆதிக்ரவி பதிவு..!

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

அஜித் இப்போது போட்டி போட்டு இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அது ஒரு புறம் இருக்க அடுத்த படமான ஆதிக் ரவி இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்பட படப்புடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டதாக ஒரு பதிவொன்றினை போட்டுள்ளார்.


குறித்த பதிவில் அஜித்தின் பெரிய ரசிகரான இவர் "ஒவ்வொரு ஆண்டும் அஜித் சாரின் குரலை திரையரங்கில் கேட்பதற்காக காத்திருப்பேன். ஆனால், இப்போது அஜித் சார், கடவுள் மற்றும் இந்த பிரபஞ்சமே இணைந்து அவருடன் பணியாற்றவும், அவர் டப் செய்வதை அருகிலேயே இருந்து என்னைக் கேட்கவும் வைத்துவிட்டன.


இந்த ஆண்டு, Good Bad Ugly என்ற அற்புதமான பயணத்துடன் தொடங்கி, முடிந்துவிட்டது. இந்த நினைவுகளை எப்போதும் என் மனதில் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன். உங்களுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் சார்.லவ் யூ சார் "என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் "விடமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களுக்காக காத்திருக்கிறேன்,ரசிகர் சம்பவம் உறுதி "என கமெண்ட் செய்து வருகின்றனர்.அந்த பதிவு இதோ..

Advertisement

Advertisement