• Apr 17 2026

சென்னை ஏர்போட்டில் செம மாஸாக நடந்து வந்த அஜித்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருப்பவர் தான் அஜித்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாக துணிவு திரைப்படம் சுமார் 350 கோடி வசூலை வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த படத்தை தொடர்ந்து, விரைவில் அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விரைவில் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போட்டு முடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் இந்த படம் குறித்து லைகா நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.


இந்த படத்தில் அனிரூத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையில் நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement