• Dec 25 2024

முத்தக்காட்சி இருந்ததால் முக்கிய ஹீரோகளின் திரைப்படத்தை நிராகரித்த சாய்பல்லவி! லிஸ்டில் அஜித் படமும் உள்ளது!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை சாய்பல்லவி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக எஸ்கே 21 திரைப்படம் உருவாகி வருகிறது.


தன்னை தேடி வரும் அனைத்து திரைப்படங்களிலும் நடிக்காமல், தனக்கு பிடித்த, தனக்கு ஏற்ற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதே போல் தனக்கு பிடிக்காத பல கதைகளை இவர் வேண்டாம் என கூறியிருக்கிறார்.


விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்து திரைப்படம் Dear Comrade. இப்படத்தில் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் சாய் பல்லவி தான் நடிக்கவிருந்தாராம். ஆனால், படத்தில் அதிகமாக முத்தக்காட்சி இருந்ததால் இப்படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டாராம்.


அதேபோல ராகவா லாரன்ஸ் - கங்கனா ரணாவத் இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி 2. இப்படத்தில் கங்கனா ரணாவத் நடித்த சந்திரமுகி ரோலில் முதன் முதலில் சாய் பல்லவி தான் நடிக்கவிருந்தாராம். ஆனால், அப்படத்தின் கதை சாய் பல்லவிக்கு பிடிக்காமல் போனதன் காரணமாக சந்திரமுகி 2 படத்தை நிராகரித்துவிட்டாராம். 


இதில் முக்கியமாக அஜித்தின் வலிமை இடம்பெற்றுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹுமா குரேஷி. ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சாய் பல்லவி தானாம்.

ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் வலிமை படத்தை நிராகரித்து விட்டாராம் சாய் பல்லவி. இப்படி தனக்கு பிடித்த கதைகளிலும், முக்கியத்துவம் உள்ள படங்களிலும் மட்டுமே நடித்து வரும் சாய்பல்லவி தற்போது அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.   

Advertisement

Advertisement