• Dec 25 2024

அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! விடாமுயற்சி வெளியீடு எப்போது..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித், தனது கடந்த கால படமான "துணிவு" மூலம் திரையரங்குகளில் வெற்றியை அடைந்திருந்தார். அதற்கு பிறகு, "விடாமுயற்சி" படத்தில் இணைந்த அவர், தற்போது அந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் "விடாமுயற்சி" படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இந்த நிலையில், அஜித் தனது அடுத்தப்படமான "குட் பேட் அக்லி" படத்தின் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து, ஒரு புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


தற்போது வந்த தகவலின்படி, "குட் பேட் அக்லி" படம் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்களால் தகவல் தெரியவந்துள்ளது.ஆனால், இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், "விடாமுயற்சி" படம் எப்போது வெளியாகும் என்பதற்கான கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

Advertisement

Advertisement