• Dec 25 2024

மோதலுக்கு தயாராகிறது அருண் விஜயின் "வணங்கான்"! போஸ்டருடன் வெளியானது ரிலீஸ் திகதி!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பாலா எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அருண் விஜய்க்கு ஒரு நல்ல கம் பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.வணங்கான் படத்தின் தயாரிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. 


அருண் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் ஒரு சிறப்பு பிரீமியரில் கலந்து கொண்டனர். இதில் அருண் விஜய் “உறுதியான மனதுடனும், கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலா சார், நான் திரையுலகில் நுழைந்ததில் இருந்தே, உங்கள் படைப்புகளின் ரசிகனாக, உங்களை ரசித்து, நேசித்தேன், இப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்கினேன்.


எங்கள் படப்பிடிப்பின் போது கூட, கதையின் தாக்கத்தை நான் முழுமையாக உணரவில்லை.  ஆனால் இப்போது வெள்ளித்திரையில் பார்க்கும்போது என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையடையச் செய்ததற்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். 


வணங்கான் திரைப்படம் எனது திரைப்படப் பயணத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று அருண் எழுதியதுடன், படத்தின் வெற்றிக்கு நன்றியையும் நம்பிக்கையையும் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது அதில் வணங்கான் ரிலீசுக்கான  திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. 



Advertisement

Advertisement