ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் ,திரிஷா நடித்துள்ள "குட் பேட் அக்லி " திரைப்படம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் trailor வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் ஜி வி பிரகாஷின் இசையில் வெளியாகிய இரண்டு பாடல்களும் செம வைரலாகியுள்ளன.
அஜித் இப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துடன் சமீபத்தில் வெளியாகிய இரண்டாவது சிங்கிள் அஜித் ரசிகர்களால் வரவேற்கும் அளவிற்கு அமைந்திருந்தது. மேலும் இந்த படம் "விடாமுயற்சி " படத்தை போல் இல்லாமல் ரசிகர்களால் ஒரு பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவுள்ளது.
மற்றும் இப் படத்தின் ரன் டைம் தொடர்பில் செய்தி வெளியாகி வைரலாகி இருந்த நிலையில் தற்போது திருநெல்வேலியில் உள்ள Multiplex திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட அஜித் பேனர் சரிந்து விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மற்றும் நல்வாய்ப்பாக அவ்விடத்தில் நின்ற யாருக்கும் காயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!