• Dec 26 2024

என்னோட காட்சி எல்லாம் கட் பண்ணுறாங்க, இனி வில்லனாக நடிக்கவே மாட்டேன்- விஜய்சேதுபதி எடுத்த திடீர் முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஜய்சேதுபதி. இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  பீசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற பல ஹிட் படங்களல் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து விக்ரம் வேதா என்னும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து ரஜினி,கமல்,விஜய்,ஷாருக்கான் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.அந்த வகையில் விஜய் சேதுபதி அண்மையில் வில்லனாக நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. 


இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஹீரோக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் தான் நான் பல படங்களில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய அழுத்தம் இருப்பதால் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். வில்லனாக நடிக்கும்போது சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. ஹீரோவை விட பவர்புல்லாக தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து நடிக்க வைப்பார்கள். நான் நடித்த நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டுவிடுகின்றன.


 அதனால் சில வருடங்கள் வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன் என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். அவர் ஜவான் படத்துக்கு பின் இந்த கருத்தை கூறி இருப்பதால் ஒருவேளை அவரின் இந்த முடிவுக்கு ஷாருக்கான் தான் காரணமாக இருப்பாரோ என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement