• Dec 27 2024

ஜோவிகாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது, பிக்பாஸ் வீட்டை விட்டு வரப்போறாள்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாக கூறியிருந்தார்.

அத்தோடு அந்த மர்ம நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் வனிதா கூறி, தாக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார்.இதனால் வனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் சிலர் வனிதா இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றும் வினாவி வருகின்றனர்.


இந்த நிலையில் வனிதா ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தன்னுடைய மகளான ஜோவிகாவுக்கு எனக்கு ஏதோ ஆச்சு என்று தெரிஞ்சிடுச்சு போல, அதான் அவ வீட்டுக்குள்ள ரொம்ப சோகமாக இருக்கிறா, என்னை யாரோ அடிச்சிட்டாங்க என்ற உண்மை மட்டும் அவளுக்கு தெரிஞ்சிருந்தால் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்திருப்பார்.


அம்மா, பிள்ளை பாசம் என்றால் இது தான் போல, அத்தோடு மறைந்து நின்று தாக்கியதால் அது யார் அடித்தது என்று என்றால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement