• Dec 26 2024

போட்ட கணக்கெல்லாம் வீணாப்போச்சே, மிக்ஜாம் புயலால் நயன்தாராவின் சம்பளத்திற்கு ஏற்பட்ட நிலமை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாகதத் திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 

திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார். அதன்படி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதன் மூலம் பாலிவூட் சினிமாவிலும் அறிமுகமாகிவிட்டார். தொடர்ந்து ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் நயன்தாரா கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


தொடர்ந்து தமிழில் இறுதியாக அன்னபூரணி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அடுத்த ஹிந்தி படத்துக்கு 10 கோடி ரூபாய் வாங்கலாம் என்ற கணக்கை அவர் போட்டிருந்ததாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. ஆனால் மிக்ஜாம் புயல் அவரது கணக்கை பொய் கணக்காக்கிவிட்டதாம்.

அதாவது அன்னபூரணி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தாராம் நயன்.  நிச்சயம் வெற்றி பெறும் எனவே தைரியமாக பத்து கோடி ரூபாயை அடுத்தடுத்த படங்களில் கேட்கலாம் என்று எண்ணியிருந்த சூழலில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அன்னபூரணி படத்துக்கு கூட்டம் அவ்வளவாக வரவில்லை. 


படம் ரிலீஸான முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் வசூலித்துவிட்டது படம். ஆனால் வெள்ளத்தின் காரணமாக கூட்டம் குறைந்ததால் வசூலும் சுத்தமாக இல்லை. இதுவரை மொத்தமே இரண்டு கோடி ரூபாய்வரை மட்டும்தான் வசூலித்திருக்கிறதாம். தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தைக்கூட படம் வசூலிக்காததால் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை 10 கோடி ரூபாயாக வாங்க முடியாதோ என்ற சோகத்தில் இருக்கிறாராம் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement