• Dec 26 2024

அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அல்லு அர்ஜுன்! எந்த கட்சிக்கு சார்பாக நின்றார் தெரியுமா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இந்தியாவில் மக்களைவை தேர்தல் பரபரப்பாக நடைபெறுகின்றது. குறித்த தேர்தலானது மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு திகதியில் நடைபெறுகின்றது. அவ்வாறே தெலுங்கானா பகுதிகளில் இன்னும் தேர்தல் நடைபெறாத நிலையில் அரசியல்வாதிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.


இவ்வாறு இருக்கையிலேயே பல நடிகர்கள் பிரபலங்கள் ஒவ்வொரு கட்சிகளுக்கு சார்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவ்வாறே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து புஸ்பா திரைப்படத்தின் மூலம் பாண் இந்திய ஸ்டாராக மாறிய அல்லு அர்ஜுனும் ஈடுபட்டுள்ளார். 


இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நந்தியாலா தொகுதியிலேயே இவ்வாறு அல்லு அர்ஜுன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது வருகையை அறிந்து அவரது ரசிகர்கள் அவ்விடத்தில் கூட்டமாக திரண்டனர். 


Advertisement

Advertisement