• Dec 27 2024

பிரபல ஹீரோவுடன் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க..! முத்தழகு சீரியல் நடிகை பகிர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்து வருபவர் தான் நடிகை சம்யுக்தா. இவர் விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் திருமணம் ஆகி ஒரு மாதத்திலேயே பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக சென்ற சம்யுக்தா, பல நாட்கள் ஆகியும் மீண்டும் கணவரிடம் செல்லாமல் இருந்ததோடு அவருக்கு விவாகரத்து கொடுத்து அதிர்ச்சியும் கொடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி முதலில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு விஷ்ணுகாந்த் பேட்டி கொடுக்க, அதன்பின்பு அதற்கு விளக்கம் கூறி சம்யுக்தா தனது பெற்றோருடன் லைவில் பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் விஷ்ணுகாந்த் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல வழிகளில் கொடுமை செய்ததாகவும் கூறி பரபரப்பை  ஏற்படுத்தி இருந்தார். இந்த விவாகரத்து குறித்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. தற்போது அவர்கள் இருவரும் அவரவர் கேரியரில்  கவனம் செலுத்தி வருகின்றார்கள்.


இந்த நிலையில், அண்மையில் சம்யுக்தா பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், 


சீரியல்களில் நடிக்கும்போது இதுவரை என்னிடம் யாரும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியது இல்லை. எனக்கு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இரண்டு படங்களில் நேரடியாகவே அட்ஜஸ்மென்ட் பற்றி பேசிய போது நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இதை தொடர்ந்து பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு வந்த போனை அம்மா எடுத்தார். அப்போது அவர்கள் சம்பளம் உள்ளிட்ட அனைத்து தகவலும் கூறிய பின் அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும் பேசி உள்ளார்கள். முதலில் என் அம்மாவுக்கு புரியவில்லை. அதன் பின்பு தான் அவர் சொன்ன விஷயம் விளங்கியது. இதனால் எனது அம்மா என் மகள் இந்த படத்தில் நடிக்க மாட்டார் என பேசிவிட்டு போனை வைத்து விட்டார் என்று கூறியுள்ளார் சம்யுக்தா.

Advertisement

Advertisement