புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது பெண்ணொருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதனால் தனது மனைவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட போது ரசிகர்களுடன் அல்லு அர்ஜுனும் சென்று இருந்தார். இதன் போது பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் அல்லு அர்ஜுன் வழங்கி உள்ளார்.
d_i_a
எனினும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் சந்தியா திரையரங்கம் மீதும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா தியேட்டரின் திரையரங்க உரிமையாளர், ஊழியர் என மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லு அர்ஜுனை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்பு நேற்று மாலை அவருக்கு இடைக்காலப் பிணையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சந்தியா திரையரங்கம் சிறப்புக் காட்சிக்கான அனுமதியைப் பெற போலீசாரிடம் ஒப்படைத்த கடிதத்தின் அடிப்படையிலேயே அல்லு அர்ஜுனுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்பு அல்லு அர்ஜுன் இன்று காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Listen News!