• Dec 26 2024

நடிகை அமலாபால் வீட்டிற்கு வந்த புதுவரவு.. என்ன குழந்தை? என்ன பெயர்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தை பிறந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு குழந்தையுடன் வரும் வீடியோவை அமலாபால் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானதாக அறிவித்திருந்தார்.

அதன் பிறகு கர்ப்பமான ஒவ்வொரு மாதத்திலும் அவர் புதிது புதிதாக போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பாக அவரது வளைகாப்பு புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமலாபாலுக்கு கடந்த 11ஆம் தேதியே ஆண் குழந்தை பிறந்த நிலையில் இன்று தான் அவர் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழந்தையுடன் அமலாபால் வீட்டிற்கு வரும் காட்சியும், வீட்டில் செய்யப்பட்டிருந்த அலங்கார காட்சியை பார்த்து அவர் ஆச்சரியமடைந்த காட்சியும், வீடு முழுவதும் பலூன்கள் பறக்க விடப்பட்டு அமலா பால் குடும்பத்தின் புது விருந்தினரை வரவேற்ற காட்சியும் உள்ளது.

மேலும் அமலாபால் தனது மகனுக்கு ’ILAI’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் இது கிறிஸ்துவ மதத்தில் உள்ள பிரபலமான பெயர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமலாபாலுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement