• Dec 26 2024

கர்ப்பமான வயிற்றை பிடித்து கொண்டு டான்ஸ் ஆடும் அமலாபால்.. 9வது மாதத்தில் இது தேவையா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது 9வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் அவர் வயிற்றைப் பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபலமான நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அவர் மலையாள நடிகர் பிருத்விராஜ் உடன் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது வசூலிலும் சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் அதன் பின்னர் கர்ப்பமானதாக அறிவித்த நிலையில் கர்ப்பமான ஒவ்வொரு மாதமும் புதுப்புது வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் 9வது மாதத்தில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் அதை கொண்டாடும் வகையில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் கர்ப்பமாக இருக்கும் 9வது மாதத்தில் இந்த டான்ஸ் எல்லாம் தேவையா? இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் அவருக்கு அறிவுரைகள் கூறி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக், கமெண்ட் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement