• Dec 25 2024

தீபாவளிக்கு சரவெடியா வெடிக்கும் அமரன்.. பிரதர், ப்ளடி பெக்கர் என்ன ஆனார்கள் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றைய தினம் அமரன், பிரதர், ப்ளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் புவன் ஆரோ, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷ்யாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளார்கள். முழுக்க முழுக்க ஆக்சன் கதையை மையப்படுத்தி ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பயணத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எந்த ஒரு குறையும் இல்லை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த படத்தில் முதல் பாதி உணர்ச்சிபூர்வமானதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.  அமரன் படத்தில் இடைவேளை காட்சி கூட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது.


இந்த திரைப்படத்தில் ராணுவ வீரராக மட்டுமில்லாமல் இல்லாமல் லவ்வர் போயாக்கவும் சிவகார்த்திகேயன் ஜொலித்துள்ளார். இரண்டாம் காட்சிக்கு பிறகு பயங்கரவாதிகளை வீழ்த்திய சிவக்கார்த்திகேயன் இது ராணுவத்தின் முகம் என்று பயங்கரமான டயலாக்கை பேசி உள்ளார்.

இந்த நிலையில், அமரன் படத்தை கொண்டாடும் ரசிகர்கள் ஜெயம் ரவியின் பிரதர் படம் மற்றும் கவின் நடித்த ப்ளடி பெக்கர் படங்களுக்கு எந்தளவிற்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் என்பதை படம் வெளியான பிறகு பார்க்கலாம். 

இதே போன்று தான், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படமும் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


Advertisement

Advertisement