• Dec 26 2024

போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எனது தயாரிப்பாளர்.. அமீர் தந்த விளக்கம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்பான மூன்று நபர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தயாரிப்பாளர் தயாரித்த படங்களின் இயக்குனர்களுக்கும் இதில் சம்பந்தம் உண்டா என்ற கேள்வி சமூக வலைதளத்தில் எழுந்த நிலையில் அந்த தயாரிப்பாளரின் படத்தை இயக்கி வரும் இயக்குனர் அமீர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் சாதிக் என்ற தயாரிப்பாளரின் 'இறைவன் மிகப்பெரியவன்என்ற படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் அமீர். அவர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில் அந்த விளக்கத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை தற்போது பார்ப்போம்.

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!

கடந்த இரண்டு நாட்களாக, எனது "இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 22-ம் தேதி நான்இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.

எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.

அந்த வகையில், சட்டவிரோத செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

முழு விவரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரை சந்திக்கின்றேன்.

Advertisement

Advertisement