• Dec 26 2024

K TV யாக மாறும் திரையரங்குகள்... பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்! ஆனாலும் உண்மை தானே?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான  படங்கள் பெரிதளவில் எடுபடவில்லை. வசூலிலும் ஓரளவுதான் பெற்றுள்ளது, இதன் மூலம் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதன் காரணமாக, மக்களை திரையரங்கிற்கு வரவழைக்க கடந்த ஆண்டுகளில் வெளியான ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.


தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகும் சிறிய பட்ஜெட் மற்றும் அறிமுக நாயகர்களின் படங்களுக்கு பெரிதளவில் வரவேற்பு இல்லாத நிலையில், மக்களை திரையரங்கிற்கு வரவழைக்க இந்த ரீரிலீஸ் உத்தியை திரையரங்குகள் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது திரையரங்குகள் எல்லாம் K TV யாக மாறி வருவதாக விமர்சித்து உள்ளார்.

அதாவது, தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்வதால் இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Advertisement