• Dec 26 2024

இயக்குனர் அமீர் மீது மான நஷ்ட வழக்கு: பிரபல தயாரிப்பாளரின் அப்பா அதிரடி நடவடிக்கை..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் அமீர் மீது ஏற்கனவே போதை பொருள் கடத்திய ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் மீது மான நஷ்டம் வழக்கு பிரபல தயாரிப்பாளரின் அப்பா பதிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான அமீர் இயக்கும்இறைவன் மிகப்பெரியவன்என்ற படத்தை ஜாபர் சாதிக் என்பவர் தயாரித்த நிலையில் அவர் போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து போதைப் பொருள் கடத்தியதில் அமீருக்கும் தொடர்பா? கூறப்பட்ட நிலையில் அமீர் இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா விகே ஈஸ்வரன் என்பவர் அமீர் மீது மான நஷ்ட வழக்கை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமீர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது ஞானவேல் ராஜா மற்றும் அவரது அப்பா குறித்து அவதூறாக பேசியதாகவும் இதன் காரணமாக தனக்கு பெரும் மனக்கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாகவும் தனது வழக்கறிஞர் மூலம் விகே ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

 
ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது விவகாரத்தில் அமீர் மீது விசாரணை எப்போது பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில் திடீரென மான நஷ்ட வழக்கும் சேர்ந்து உள்ளதை அடுத்து அவருக்கு நேரமே சரியில்லை என திரையுலகினர் கூறி வருகின்றனர். அடுத்தடுத்து வரும் வழக்குகளை அமீர் எப்படி சந்திக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Advertisement

Advertisement