• Dec 25 2024

ஷாருக்கான் நம்ம ஆளுதான்... தெலுங்கு ஹீரோ படத்துக்கும் டீல் பேசி முடித்த அட்லீ..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ இன்று, அவரை விட அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக உயர்ந்து விட்டார். ஜவான் படத்தை இயக்கி பாலிவுட் மோஸ்ட் வான்டட் இயக்குநராக உயர்ந்துவிட்டார்.

இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு, பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டாலும் தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அட்லீ குடும்பம் மட்டுமே கலந்து கொண்டிருந்தது. இதைவிட அட்லீக்கு வேற என்ன பெருமை வேண்டும்.

ஜவான் பட வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து கிடைக்கும் பாராட்டுக்களால் மகிழ்ச்சியில் திணறடித்து வருகிறார் அட்லீ.


ஜீ தமிழ் சினிமா விருது 2024 ற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீக்கு, ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது.

இந்த விருதை அறிவித்ததும் பாலிவுட்டில் தனக்கு வாழ்க்கை கொடுத்த ஷாருக்கான் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அதன் பின் அவரை ஷாருக்கான் கட்டி அணைத்து முத்தமிட்ட காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தில் ஷாருக்கான முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் எட்டாம் தேதி அல்லு அர்ஷின் பர்த்டே அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement