• Dec 25 2024

ஐசுவின் குடும்பத்தை இழுத்துப் பேசிய அமீர்! Unfollow குறித்தும் வெளிப்படை பேச்சு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக் பாஸ் வீட்டில் நிக்சன் - ஐஸ்வர்யா ஜோடி செய்த லவ் சேட்டைகளை வெளியில் இருந்து பார்த்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் நேரடியாகவே பிக்பாஸ் செட்டுக்கு சென்று தம் மகளை வெளியே விடுமாறு கெஞ்சிக் கேட்டமை தொடர்பில் சினிசமூகம் தளத்தில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தோம்.

இந்த நிலையில், பிக் பாஸ் அமீர் தன்னை வளர்த்துவிட்டது  ஐசுவின் குடும்பம் என்று ஐசுவின் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார். மேலும், எனக்கு வாழ்க்கை கொடுத்து நான் இந்த அளவிற்கு வளர்ந்து வந்ததற்கு காரணம் ஐசுவின் பெற்றோர் தான் என பல இடங்களில் அமீர் பெருமையாக பேசி இருந்தார். 


மேலும் அவர் கூறுகையில், பொதுவாக போட்டியாளர்களுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாது. உள்ளே இருப்பவர்களில் நாம் நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் நிஜத்தில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். நாம் கெட்டவர்கள் என்று முகத்துக்கு நேராக திட்டி கொண்டிருப்போம். ஆனால் அவர்கள் நல்லவர்கள் என்பது வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தெரியும். 

அதுபோல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு உள்ளே நடக்கும் நிலவரம் அவர்களுக்கு புரியாது. அதை நான் புரிய வைப்பதற்காக முயற்சி செய்வேன். அதுபோல நான் சமீபத்தில் ஐசுவின் குடும்பத்தோடு பிரிந்து இருக்கிறேன் என்று சில செய்திகள் பரவி வருகிறது. அது குறித்து என்னால் இப்போது விளக்கம் முடியாது. 

அதே நேரத்தில் ஐசுவின் பெற்றோர்களை சமூக வலைதள பக்கத்தை அன்பாலோ செய்து விட்டேன் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய ப்ரொபைல் எடுத்துப் பார்த்தால் தெரியும். 


ஒருவேளை ஐசுவின் குடும்பத்தினர் வேண்டுமென்றால் என்னை அன்பாலோ செய்து இருக்கலாம். என்னை வளர்த்து விட்டவர்களை நான் எப்போதும் மறந்தது கிடையாது. எக்கு ஒரு சின்ன உதவி செய்தவர்களை கூட நான் பெரியதாக நினைத்திருக்கிறேன்' என்றும் அமீர் கூறி இருக்கிறார்.

அதுபோல ஐசு குறித்து வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கும் தொடர்ச்சியாக அவர் லைக் செய்து வருவதும் கூட அஸ்ரப் குடும்பத்தினருக்கு கோபமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. 

ஆனால் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் அமீர் ஆரம்பத்தில் இருந்தே பிரதீப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். 

Advertisement

Advertisement