• Dec 25 2024

பிக்பாஸ் மீதும் கமல் மீதும் கேஸ் போடுவன்! ஆதாரத்தை காட்டுமாறு மிரட்டும் வனிதா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


பிக் பாஸ் சீசன் 7 ல் வனிதா மகள் ஜோவிகாவும் கலந்து கொண்டுள்ளார். அதன்படி, பிக் பாஸ் டைட்டிலை ஜோவிகா வெல்வதற்காக வெளியே வனிதா விஜயகுமார் ஏகப்பட்ட வேலைகளை பார்த்து வருவதாக குற்றமும் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜோவிகா தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் கமிட் ஆகி உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலம் என்கிற பெயருடன் என்ட்ரி கொடுக்க வனிதா மூலமாக விஜய் டிவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், தன்னுடைய மகள் சொல்லாத வார்த்தைகளை சிலர் வெளியே சொல்லுகின்றனர். அதனால் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும் இல்லை என்றால் பிக்பாஸ் மீதும் கமல் மீதும் கேஸ் போடுவேன் என்று பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். 

அதுமட்டுமின்றி,  பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரத்தில் என் பொண்ணு பெயரையும் சேர்த்து கெடுப்பது போல இருக்கு.இதனால கமல் மற்றும் விஜய் தொலைக்காட்சி மீது அவதூறு வழக்கு போடுவேன். இந்த வாரம் இந்த பிரச்சனை குறித்து கமல் பேசியாக வேண்டும்.அத்துடன், என் பொண்ணு பெயர் இந்த பிரச்சனையில் அதிகமாக அடிபடுது. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு என்று மேலும் வனிதா பேசியிருக்கிறார்.

இதேவேளை, முதல் வாரத்திலேயே ஜோவிகா போல்டாக வாய் திறந்து பேசியதும் எல்லாருமே ஜோவிகாவுக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பித்து கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது அவரை உடனடியாக வெளியே அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகளை  முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement