• Dec 26 2024

உடம்பு முழுக்க பாலாவின் போட்டோவை ஒட்டிய தீவிர ரசிகர்! பின்னணியில் இப்படியொரு சோகம்?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் பாலா. இவர் இணையத்தில் அதிகமாக கொண்டாடப்படும் நடிகராகவும், சமூக ஆர்வலராகவும் காணப்படுகின்றார்.

விஜய் டிவியில் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின்பு குக் வித் கோமாளி என்று பல நிகழ்ச்சிகளையும் கலந்து கொண்டு தற்போது திரைப்படங்களிலும் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் தனக்கு கிடைக்கும் சிறிய சிறிய வருமானத்திலும் அதிகளவானோருக்கு உதவி செய்து தன்னால் இயன்றதை செய்து வருகின்றார். இதன் காரணத்தினால் பாலாவை பலரும் கொண்டாடி வருகின்றார்கள். இவருடைய சேவையை பார்த்த ராகவா லாரன்ஸ் தற்போது இவருடன் கூட்டணி வைத்து பலருக்கும் இணைந்து உதவி செய்து வருகின்றார்.

இவ்வாறு கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ, வாகன வசதி இல்லாத ஊருக்கு ஆம்புலன்ஸ், விவசாயிகளுக்கு உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு பைக் என்று இவருடைய சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது.


இந்த நிலையில், பாலாவின் தீவிர ரசிகர் ஒருவர் பாலாவின் போட்டோக்களை உடம்பில் ஒட்டியவாறு அவரைக் காண துடித்துள்ளார். அதன்படி பாலாவும் அவரை சந்தித்து அவருக்கு தேவையான பண உதவியை செய்துள்ளார்.

அதன்படி குறித்த ரசிகரின் மனைவி உடல் சுகயுனமுற்று இருப்பதாகவும், அதற்கு பாலா கட்டாயம் உதவி செய்வர் என்ற வகையிலேயே அவர் இவ்வாறு செய்துள்ளதாக தெரிய வருகிறது. தற்போது பாலாவின் இந்த காரியத்தை பார்த்து பலரும் பாராட்டி  வருகின்றார்கள்.

Advertisement

Advertisement