• Dec 25 2024

57 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் பப்லு பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸியமான விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திரவேடத்திலும் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்த வந்தவர் தான் பப்லு என்று அழைக்கப்படும் ப்ரித்விராஜ். இவர் தனது 4 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். 57 வயதாகும் இவர் தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது வருங்கால மனைவியுடன் அடிக்கடி இன்டர்வியூக்களிலும் கலந்து கொண்டு வருகின்றார். இதனால் தற்பொழுது ட்ரெண்டிங் ஜோடியாக இவர்களும் வலம் வருகின்றனர். இந்த நிலையில் இவரது வாழ்வில் நடந்த விடயங்கள் குறித்து பார்ப்போம்.


இவருடைய அப்பா திருச்சியைச் சேர்ந்தவர் என்பதோடு போலிஸ் அதிகாரியாகவும் இருந்தாராம். இதனால் பெங்களுரில் பிறந்த இவர் பிற்காலத்தில் மதுரையில் தான் வளர்ந்து வந்தாராம். இதனை அடுத்து தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தாராம்.

இவருடைய அப்பாவிற்கு நடிப்பதென்றால் பிடிக்குமாம்.ஆனால் அவருக்கு சந்தர்ப்பம் அமையாத காரணத்தினால் தனது மகனை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். இதனால் அப்பாவினுடைய ஆசைக்காகக் தான் நடிக்கவே வந்தாராம்.


ஒரு நாள் இவரை பார்த்த பிரபல இயக்குநர் இவரை படம் நடிக்க விடுமாறு தந்தையிடம் கேட்டுள்ளாராம். அதன்படி பெத்த மனசு பித்து ,சங்கே முழங்கு என கிட்டத்தட்ட 68 படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம். தமிழைத் தவிர தெலுங்கு மலையாளம்  ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இவர் நடித்தாராம்.

இவர் சின்ன வயதிலே நடிக்க வந்ததாலும் நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வம் இருந்ததால் தரம் 10 உடன் படிப்பை இடை நிறுத்தி விட்டாராம். தொடர்ந்து 19 வயதில் ஒரு தாயின் சபதம் என்னும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தாராம்.இதனைத் தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் மாறி மாறி நடித்து வருகின்றாராம்.


இப்படி இருக்கும் போது கடந்த 1994ம் ஆண்டு மீனா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். ஆரம்பத்தில் மீனா வீட்டில்  மறுப்புத் தெரிவித்திருந்தாலும் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டார்களாம். 

இதனை அடுத்து இவர்களுக்கு 2005ம் ஆண்டு ஹரத் என்னும் மகன் பிறந்துள்ளார். மகனுடைய 4 வயதில் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டதால் மனைவி மகனுடன் தனது நேரத்தை செலவழித்து வந்ததால் ஆறு அண்டுகளாக இருவருமே பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் இவர் ஹைதராபாத் சென்ற இடத்தில் தான் இவருடைய இரண்டாவது மனைவியை சந்தித்து இருக்கின்றார். முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் தற்பொழுது காதலர்களாக மாறியுள்ளனர் விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement