• Dec 25 2024

பல பெண்களின் கனவு நாயகன் பிக்பாஸ் ராம்.. இப்பவும் சிங்கிள் தானா.. இதோ பல சுவாரஸ்யமான விஷயங்கள்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டின் சீசன் 6இன் உடைய உயர்ந்த மனிதன் என்றால் அது நம்ம ராம் தான். அதுமட்டுமல்லாது இப்போ வரைக்கும் பல பேர் மத்தியில் நல்ல பெயர் ஓடு தான் இவர் அந்த வீட்டில் இருந்து வருகின்றார். அதுமட்டுமல்லாது பல பெண்களின் கனவு நாயகனாகவும் இருந்து வருகின்றார்.

இவரின் முழுப்பெயர் ராம் ராமசாமி. இவர் டிசம்பர் 20 இல் 1994 இல் சேலம் மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரன் உண்டு. அவரின் பெயர் அர்ஷ். அப்பாவின் பெயர் ராமசாமி சுப்பிரமணியம். அம்மாவின் பெயர் உமாமகேஸ்வரி. இவரின் நெருங்கிய நண்பர்கள் என்றால் அது இவரின் குடும்பத்தவர்கள் மட்டும் தான். அதிலும் குறிப்பாக பாட்டி, தாத்தா ஆகியோரை சொல்லலாம்.


இவரின் உயிர் என்றால் அது தாத்தா தானாம். அதற்கு காரணம் இவரின் உயிரை சிறுவயதில் அவர் தானாம் காப்பாற்றி இருக்கின்றார். அந்தவகையில் இவருக்கு சின்ன வயதில் ஹார்ட் பிரச்சனை இருந்திருக்கு. இவருடைய தாத்தா ஒரு ஹார்ட் டாக்டர் என்பதால் ராமை அவர் தான் காப்பாற்றி இருக்கின்றார்.

ராமிற்கு தாத்தாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவருடன் தான் எப்போதுமே இருப்பார். எனினும் இப்போது தாத்தாவிற்கு உடம்பு சரியில்லாமல் வந்ததால் அவரை கவனிக்கும் பொறுப்பில் இருந்து வந்திருக்கின்றார்.

இவர் ரொம்ப நன்றாகப் படிப்பார். ஸ்கூலில் எப்போதுமே முதலாவது ராங்கில் தான் வருவாராம். அதிலும் குறிப்பாக 12ஆம் வகுப்பில் 1200 மார்க்குக்கு 1187 மார்க் வாங்கி இருக்காராம். இவர் 10 வயதில் இருக்கும்போதே நன்றாக கிரிக்கெட் விளையாடுவார். இதனால் அவரை பொறுப்பு இல்லாத பையனாகவே வீட்டில் நினைத்திருந்தார்கள். 

அதுக்கு அப்புறமாக 15 கிரிக்கெட் பிடிக்கவில்லை என்று டென்னிஸ் க்கு மாறி விட்டாராம். அதையும் நிறுத்தி விட்டு பிறகு நீச்சல் கற்றுக் கொள்ள சென்றிருக்கின்றார். ஆனால் பின்னர் அதுவும் தனக்கு சரி வரவில்லை என்று விட்டு விலகி விட்டாராம்.


தற்போது 27 வயதை எட்டியுள்ள ராம் நன்றாகவே படம் வரையக் கூடிய திறமை கொண்டவர். இவர் எப்போதுமே இவர் உண்டு இவரின் வேலை உண்டு என்று வீட்டிலும் தனியாகத் தான் அமர்ந்திருப்பாராம். ரொம்பவே அமைதியானவர். எல்லார்கிட்டேயும் அன்பாக நடந்து கொள்ளக் கூடியவர். தெருவில நிக்கிற ஆடு மாடுகளைக் கூடி கவனித்து வளர்த்து வருகின்றாராம்.

ராம் பி.காம் படிச்சு முடித்திருக்கின்றார். இவர் படிச்சது சென்னை லாயலோ காலேச்சில் தான். அங்கு மாடலிங் உம் கற்றுக் கொண்டிருக்கின்றார். ஆனாலும் அவரை ரொம்பவே ஒல்லியாக இருக்கு என்று சொல்லி பலரும் நிராகரித்து விட்டார்களாம்.

இவர் விஜய் டிவியில் நடந்த எல்டமோ மூலமாகத்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவரின் அண்ணனின் திருமணத்தை கூடி இவர் தான் முன் நின்று நடாத்தி இருக்கின்றார். அந்தப் பொண்ணு ராமின் நெருங்கிய தோழி தான். இவரின் அண்ணனின் திருமணம் ஒரு லவ் மேரேஜ்.

ராமைப் படிப்பதற்காக கனடா எல்லாம் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அவர் பிடிக்கவில்லை என்று கூறி 2வாரத்தில் திரும்பி வந்து விட்டார். இதன் பின்னர் தான் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து பல பெண்களின் மனதில் இன்றுவரை இடம் பிடித்து இருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவர் இன்றுவரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement