• Dec 26 2024

ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் பங்ஷன்! கலந்துகொண்ட ஒரேயொரு தமிழ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

உலகில் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சன்ட் எனும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் அம்பானி வீட்டு  ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அட்லீ போன்ற பாலிவுட், ஹாலிவுட் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் பிரபல டாப் பாடகியான ரிஹானா இந்த திருமண நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி நடனம் ஆடுவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்து, பட்டையை கிளப்பி வருகிறார்.


அம்பானி வீட்டு விசேஷம் நடக்கும் இடத்தில் ஒரே பிரபலங்களாக இருக்கிறார்கள். அந்த விசேஷத்தில் கோலிவுட்டில் இருந்து சென்றிருப்பது இயக்குநர் அட்லி மட்டுமே. தன் காதல் மனைவியான ப்ரியா மற்றும் செல்ல மகன் மீருடன் ஜாம்நகருக்கு சென்றிருக்கிறார்.


அட்லியை பார்த்த புகைப்படக் கலைஞர்கள் அவரை புகைப்படம் எடுத்துதள்ளிவிட்டார்கள். மேலும் மீரின் முகத்தை முதல் முறையாக பார்த்த புகைப்படக் கலைஞர்களை அந்த செல்லத்தையும் புகைப்படம் எடுத்து அட்லிஜியின் மகன் என சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்துள்ளனர்.


அம்பானி வீட்டு விசேஷத்தில் அட்லியும், ப்ரியாவும் கலந்து கொள்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கூட கலந்து கொண்டார்கள் அட்லிக்கு அடித்த ஜாக்பாட். அம்பானி வீட்டு விருந்தாளிகள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாரே. அம்பானி வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அட்லிக்கு தொடர்ந்து அழைப்பு வருகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அட்லி தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement