• Dec 26 2024

இனி ஆண்ட்ரியா தான் லேடி சூப்பர் ஸ்டார்.. சவால் விட்டு சம்பவம் பண்ணிய இயக்குநர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாற்றிய படம் என்றால் அது ’அறம்’ என்று கூறலாம். அந்த படத்தில் அவருக்கு கிடைத்த அட்டகாசமான கலெக்டர் கேரக்டருக்கு பிறகு தான் அவரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அதன் பிறகு அவர் நடித்த படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் ’அறம்’ படத்தை மிகவும் பொறுப்புடனும் சமூக பார்வையுடனும் இயக்குநர் கோபி நாயனார் இயக்கியிருந்தார் என்பதும் அந்த படம் கோபி நாயனாருக்கு மட்டுமின்றி நயன்தாராவுக்கும் ஒரு திருப்புமுனையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ’அறம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்கிய கோபி நயினார், அதன் பின்னர் ஏழு வருடம் கழித்து இயக்கிய திரைப்படம் தான் ’மனுசி’. இந்த படத்தில் நடிக்க முதலில் நயன்தாராவை தான் அவர் அணுகியதாகவும் ஆனால் நயன்தாராவுக்கு இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் நயன்தாரா நடிக்க வேண்டிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்தார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமீபத்தில் வெளியாகிய வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ட்ரெய்லரில் அரசியல் சார்ந்த பல விஷயங்கள், இந்தியா என்ற பெயர் வரும் முன்பே தமிழர்கள் வாழ்ந்த அடையாளம், ஜாதி மதத்தால் இந்தியாவை பிரிக்க செய்த சதி உள்ளிட்ட பல கன்னத்தில் அறையும் படியான வசனங்கள் உள்ளது என்பதும் கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படங்கள் வெளியாகாத நிலையில் இந்த படம் நிச்சயம் அவரை முன்னணி நடிகையாக கொண்டு செல்லும் என்றும், இந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் லேடி சூப்பர் ஸ்டார் பட்டமும் இவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே த்ரிஷாவுக்கு லேடி சூப்பர் பட்டத்தை அவருடைய ரசிகர்கள் கொடுத்து வரும் நிலையில் நயன்தாரா அந்த பட்டத்தை தக்க வைப்பாரா? அல்லது த்ரிஷா அல்லது ஆண்ட்ரியாவிடம் இழப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement