• Dec 27 2024

விஜய்க்கு மை வச்ச பொண்ணு யாரு? இப்படி சிரிக்கிறாங்களே.. இன்ஸ்டா ஐடியை தேடும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நேற்று வாக்கு செலுத்த வந்த போது அவருக்கு விரலில் மை வைத்த பெண் அவரை பார்த்து சிரித்ததும், விஜய் அவரை பார்த்து திரும்ப சிரித்ததுமான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பெண் யார்? என நெட்டிசன்கள் இன்ஸ்டாவில் தேடி வருவதாக கூறப்படுகிறது

நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்த போது விஜய் கொஞ்சம் தாமதமாக வாக்களிக்க வந்தார். அப்போது அவரை வாக்கு சாவடிக்கு உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் கேமிராமேன்கள் கூட்டம் இருந்ததை அடுத்து மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர் வாக்கு சாவடிக்கே சென்றார்.

அதன் பின் அவரது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து வாக்களிக்க தேர்தல் அதிகாரி அனுமதித்த நிலையில் அடுத்ததாக அவர் விரலில் மை வைக்க சென்றார். அப்போது விஜய்க்கு கைவிரலில் மை வைத்த பெண் விஜய்யை பார்த்து சிரிக்க, பதிலுக்கு விஜய் சிரித்து பேச காட்சியின் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை அடுத்து விஜய்யை பக்கத்தில் பார்த்து பேசும் அளவுக்கு கொடுத்து வச்ச அந்த பெண் யார் என்பதை நெட்டிசன்கள் தேட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர் ஒரு அரசு அதிகாரி அவர்தான் கடமையைத்தான் செய்தார், பிரபலம் என்பதால் சாதாரணமாக சிரித்திருப்பார் அதை போய் பெரிதாக்கி அவரது இன்ஸ்டா ஐடியை தேடும் அளவுக்கு செல்ல வேண்டாம் என்று விஜய் ரசிகர்களே நெட்டிசனுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.  

Advertisement

Advertisement