விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன் 9வது சீசன் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்களுடைய அறிமுகங்களை கொடுத்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முதலாவது போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலமும் மருத்துவருமான திவாகர் உள்ளே சென்றார். இவர் வாட்டர் மெலன் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் சூடிக்கொண்டார். மேலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் இவருக்கு வழக்கமான ஒன்று.
இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலமான அரோரா சின்க்ளர் உள்ளே சென்றார். இவரை ரசிகர்கள் பலூன் அக்கா என அழைக்கின்றனர். அதன் பின்பு 3-வது போட்டியாளராக எஃப்.ஜே. என்கிற அதிசயம் (FJ alias Adisayam), 4-வது போட்டியாளராக இன்ஸ்டா பிரபலம் வி.ஜே. பார்வதி பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் மேடையில் முதலாவதாக என்ட்ரி கொடுத்த திவாகர், தான் இந்த வீட்டிற்கு வந்ததற்கான காரணத்தை பகிர்ந்தார். அதாவது எனது நடிப்புத் துறையில் இன்னும் உயர்ந்த நிலையை அடையவும், இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு கிடைக்கும் ஈடுபாட்டினால் எனது பிசியோதெரபி லட்சியங்களை மேலும் முன்னேற்றும் நோக்கத்தில் வந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான பலர் வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திறமை இல்லாதவர்கள் அதிலும் குறிப்பாக திவாகர், பலூன் அக்கா என்கின்ற அரோரா சின்க்ளர் ஆகியோரை விஜய் டிவி டிஆர்பிக்காக எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!