• Oct 26 2024

லேடி சூப்பர் ஸ்டாரை சந்தித்த அனிதா விஜயகுமார்! எங்கு தெரியுமா? வைரல் போட்டோஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் விஜயகுமார். இவரின் குடும்பத்தார் மூன்றாவது தலைமுறையை தாண்டியும் நடித்து வருகிறார்கள்.

அண்மையில் தான் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா பிரபலங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு தியாவின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி வைத்திருந்தார்கள்.

விஜயகுமாரின் பிள்ளைகள் இந்த திருமணத்தில் கலக்கிய வீடியோ, அருண் விஜய் தனது அக்காவுடன் ஆடிய வீடியோ, தியாவின் திருமண புகைப்படங்களும் தற்போது வரையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணத்திற்கு விஜயகுமாரின் குடும்பம் ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா இன்றைய தினம் தனது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டுள்ளார். அவரது திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பிரபல நடிகர்களான ரஜினி, கமல், சூர்யா, நயன்தாரா, விக்ரம் ஆகியோர் நேரிலே சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.


இவ்வாறான நிலையில் தற்போது விஜயகுமாரின் குடும்பமும் திருமணத்தில் பங்கேற்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதன் போது நயன்தாரா, சூர்யா ஆகியோருடனும் விஜயகுமாரின் மகள் குடும்பத்தார் புகைப்படங்களை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement