• Dec 27 2024

அட பணக்கார பைத்தியமே..! ஸ்ருதியை கிழித்த மனோஜ்! விஜயாவின் ஈனச் செயல்? எச்சரித்த அண்ணாமலைக்கு மருமகள் ட்விஸ்ட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கிச்சனில் இருக்கும் மீனாவிடம், இப்ப எதுக்கு அப்பாட்ட  எல்லாம் சொன்ன என முத்து கேட்க,  எனக்கு வேற யார் இருக்கா? அவர் ஒருத்தர் தான் எனக்கு ஆறுதல் சொல்ல இருக்கார். என் தம்பிய ஏன் அடிச்சீங்க? அவன் பாவம் படிக்கிற பிள்ளை அப்படி என்று மீனா ரொம்பவும் பீல் பண்ணி கதைக்கிறார்.

அதற்கு முத்து, அவன் என்ன செய்தான் தெரியுமா? என   விஷயத்தை சொல்ல வரவும், அதை காது கொடுத்து கேட்காமல் நாங்க காசு பணம் இல்லாதவங்க தான், அதனால தானே இப்படி பண்றீங்க என்று சொல்ல, முத்து ஒன்றுமே சொல்லாமல் அங்கிருந்து செல்கிறார்.

மறுபக்கம் வீட்டில் முத்துவுக்கும் மீனாவிற்கும் இடையில் நடந்த பிரச்சனையை பார்வதி இடம் சொல்லி மகிழ்கிறார் விஜயா.

அத்துடன், முத்து குடித்துவிட்டு மீனாவை போட்டு அடிக்க போறான்,  இந்த பூக்காரி அவளாவே அறுத்துக்கிட்டு ஓட போற என்று ரொம்பவும் சந்தோஷமாக கதைத்து விட்டு திரும்ப, இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த அண்ணாமலை,  உன்ன பத்தி நானும் போன் பண்ணி சொல்ல போறேன், இப்படியா வீட்டுக்கு நடக்குற பிரச்சினையை அடுத்தவங்களுக்கு சொல்லுவா என்று பேசுகிறார்.


இதை தொடர்ந்து கார் செட்டில் செல்வமும் அவர்களது பிரண்ட்ஸ்சும் இருந்து கதைத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த சிட்டி மொத்த காசையும் வைக்கனும், அப்படி இல்லாட்டி 3 நாள்ல காரை எல்லாம் தூக்கி விடுவேன் என்று மிரட்டி செல்கிறார்.

இதை அடுத்து ரூமில் ஸ்ருதியும் ரவியும் பேசிக்கொண்டிருக்க, இன்னிக்கு என்ன நாள் என்று ஸ்ருதி ரவியிடம் கேட்க, ரவி மறந்து போகிறார். அதற்கு ஸ்ருதி,  உன்னை நான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்ணும் போது பார்த்த நாள் அப்படி என்று சொல்ல, ரவிக்கு அது பற்றி ஒன்றுமே ஞாபகம் இல்லை.

இதை தொடர்ந்து ஸ்ருதி, அண்ணாமலையிடம் போய் நீங்க எப்ப ஆண்டியை பார்த்தீங்கன்னு கேட்க, அவர் 30 வருஷத்துக்கு முன்னாடி நான் விஜயாவை பாக்கும் போது ஜிமிக்கி போட்டு, சாரி கட்டி, மல்லிகை பூ வச்சி இருந்தா என்று நேரம் காலம் எல்லாம் சரியாக சொல்கிறார்.

இதை தொடர்ந்து ரோகிணி இடமும் மனோஜிடமும் மாறி மாறி கேட்க, அவர்களும் அதற்கேற்றது போல சரியாக சொல்கிறார்கள். 

அதன்பின், உனக்கு மட்டும் தான் ஞாபகம் இல்ல மத்த எல்லாருக்குமே ஞாபகம் இருக்கு. இதுக்கு பனிஷ்மென்ட்டா என்ன நீ சைக்கிளில்ல ஸ்டுடியோ கூட்டி போகணும் என ஸ்ருதி  செல்கிறார்.

ஆனாலும், விஜயாவிடம் அண்ணாமலை பற்றி கேட்க, விஜயாவுக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை. ஆனால் ஸ்ருதி,  உங்களுக்கு தான் ஞாபகம் இல்ல. ஆனா அங்கிள் எல்லாத்தையும் அப்படியே சொல்றாருன்னு சொல்ல, விஜயாவுக்கு லவ் மூட் வருகிறது. அதற்குப் பிறகு அண்ணாமலைக்கு டீ வைத்து பக்கத்தில் இருந்து வெட்கத்துடன் கொடுக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement