• Dec 26 2024

முட்டாளுக்கு விருது கொடுப்பாங்களா? அமிர்தாவை ஒதுக்கிய ஈஸ்வரியின் திடீர் முடிவு! சைக்கோவான கணேஷ்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், அமிர்தாவையும் நிலாவையும் கணேஷ் கடத்திக்கொண்டு போக, அவர்களை பின்தொடர்ந்து பாக்கியாவும் ஆட்டோவில் செல்கிறார். எனினும் இடையில் அவர்களை விட்டு விடுகிறார். இதை அடுத்து உடனடியாக எழிலுக்கு போன் பண்ணி நடந்துவற்றை சொல்ல, எழிலும் ஒரு பக்கம் அமிர்தாவை தேடிச் செல்கிறார்.

இதை தொடர்ந்து பாக்கியா வீட்டுக்கு வரவும் எல்லாருமே கோபமாக பார்த்து, இதற்குத்தானே சொன்னோம், எங்க பேச்ச கேக்க மாட்டியே என கோபியும் ஈஸ்வரியும் சரமாரியாக திட்டுகிறார்கள்.


அமிர்தா அப்படியே போகட்டும், இதை நாங்க முதலில் பண்ணியிருக்கணும் என்று ஈஸ்வரி சொல்கிறார். அதற்கு பாக்கியா எப்படி அத்தை அப்படியே விட முடியும் என்று கேட்க, எல்லாம் உன்னால தான், நீ தான் நாங்க தடுக்கவும் எழிலுக்கு கல்யாணம் பண்ணி வச்ச,  இப்போ எழில வர சொல்லு, அமிர்தாவ தேடி போக வேணாம் அவ அப்படியே போகட்டும் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

இதைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பாக்கியா இடிந்து போய் உட்கார்ந்து இருக்கிறார். செழியனும் அவர்களை தேட வெளியே செல்கிறார்.

இன்னொரு பக்கம் அமிர்தாவையும் நிலாவையும் கடத்தி வைத்த கணேஷ், அவர்களை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் இதுதான் நம்ம வாழ்க்கை இனி இப்படித்தான் என்று  அமிர்தாவிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

ஆனாலும் அமிர்தா என்னை விட்டுடு என கெஞ்சவும் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று ஒரு சைக்கோ தனமாக கதைக்கிறார் கணேஷ். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement