• Dec 26 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பும் மற்றுமொரு போட்டியாளர்- இப்பிடிப் பண்ணுறாங்களேம்மா?- குழப்பத்தில் ஹவுஸ்மேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவருகிறது. இந்த சீசனின் போட்டியாளர்கள் ரொம்பவே பிரபலமானவர்களாக இல்லை.

 இருந்தாலும் போட்டியாளர்களில் பிரதீப்பின் செயல்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் கொடுத்தன. அதிலும் அவர் தன்னுடைய ஒவ்வொரு மூவையும் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்பதை நோக்கியே நகர்த்தினார்.


இருந்தாலும் இவர் மீது ஹவுஸ்மேட்ஸினால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டினால் ரெட்காட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் ஸ்மோல் மற்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கிடையில் மோதலும் உருவாகிவிட்டது. இதனால் என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


இந்த நிலையில் வைல்ட்காட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா என்னால் இந்த வீட்டுக்குள் இருக்க முடியவில்லை, என்னையும் வெளில அனுப்பிடுங்க பிக்பாஸ் என்று கேட்டுள்ளார். இதனால் காமெரா முன்னாடி நின்று இவர் கேட்டதால் இவரும் சீக்கிரமாக வெளியேறிடுவாரா, வெளியேறுவதற்காக தொடர்ந்து ஏதும் முயற்சிகள் செய்வாரா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement