• Dec 26 2024

முகம் சுளிக்க வைக்கும் ராஷ்மிகாவின் வைரல் வீடியோ... அசிங்கமாக இருக்கு என கண்டித்து வரும் பிரபலங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பல பிரபலங்கள் கண்டித்து வருகின்றனர்.


ராஷ்மிகா நடிப்பில் தற்போது அனிமல் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வீடியோ சமீபத்தில் வெளிவந்து படுவைரலானது. சினிமா திரையுலகில் நேஷனல் கிரஷ் என்று பிரபலியமானவர் இவர். மேலும் தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை தன்வசம் சுண்டி இழுந்துள்ளார். 


நடிகைகளை அசிங்கப்படுத்துவற்காக சமீபத்தில் பயன்படுத்தும் விஷயம் தான் டீப்ஃபேக். இதன்மூலம் வேறொருவரின் உடலில் நடிகையின் முகத்தை வைத்து டீப்ஃபேக் செய்து அந்த வீடியோவை சில இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


இதனால் அந்த நடிகர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. அப்படி தான் தற்போது நடிகை ராஷ்மிகாவிற்கும் நடந்துள்ளது. டீப்ஃபேக் மூலம் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முகம் சுழிக்க வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி இருக்கிறார்கள்.


இது டீப்ஃபேக் தான் என கண்டுபிடித்த ரசிகர்களும், நட்சத்திரங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் இதை கண்டித்துள்ளார்.



Advertisement

Advertisement