• Apr 23 2026

பரத்துக்கு மேலும் ஒரு தோல்வி.! காளிதாஸ் 2 படத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் படங்களில் வெற்றியின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளது. 

குறிப்பாக ஏப்ரல் மாதம் இதுவரை வெளியான படங்களில் எதுவும் குறிப்பிடத்தக்க அளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலை எட்டவில்லை என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான நீளிரா, காளிதாஸ் 2, கார்மேனி செல்வம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தடுமாறி வருகின்றன. அதேபோல் ஹாப்பி ராஜ் உள்ளிட்ட படங்களின் வசூலும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் 2 அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வசூலில் சரிவை சந்தித்துள்ளது.


இப்படத்தின் வசூல் ஆரம்ப நாட்களிலேயே மந்தமாக இருந்ததுடன், தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. முதல் ஐந்து நாட்களில் படம் சுமார் 1.19 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் பரத்துக்கு விரைவில் ஒரு வெற்றிப் படம் கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement