• Apr 23 2026

தேர்தல் களத்தில் தொடரும் சிந்தாமணியின் சதி திட்டம்.! விஜயாவை துரத்திய மீனாவின் நண்பிகள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

 சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவை எல்லோரும் வந்து பார்த்து விசாரிக்கின்றனர். தேர்தலிலிருந்து பின்வாங்க நினைத்த மீனாவிற்கு எல்லாரும் பக்கபலமாக நிற்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மீனாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களின் குடும்பத்தினரை சிந்தாமணியின் அடியாட்கள் சென்று அச்சுறுத்துகின்றனர். எனினும் அவர்கள் அதற்கு அஞ்சாமல், "மீனா பின்வாங்க வேண்டாம், நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம்" என்று மீனாவை தேர்தலில் தொடர்ந்து நிற்குமாறு ஊக்கமளிக்கின்றனர்.

இன்னொரு பக்கம், வீதியில் ஒட்டப்பட்டிருந்த மீனாவின் போஸ்டர்களை எல்லாம் விஜயா கிழிக்கின்றார். மீனா வெற்றி பெற்றால் தான் அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்தப் போஸ்டர்களை கிழிக்கின்றார்.

அந்த நேரத்தில் அந்த வழியால் வந்த மீனாவின் நண்பர்கள் போஸ்டரை கிழிப்பதைப் பார்த்து விஜயாவை துரத்துகின்றனர். ஆனால் விஜயா ஓடி விடுகிறார். அந்த வழியால் முத்து வரவும், முத்துவின் காரில் மோதிய விஜயா அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.

இதன்போது துரத்தி வந்த மீனாவின் நண்பர்களிடம் என்ன நடந்தது என முத்து கேட்க, மீனாவின் போஸ்டரை கிழித்துவிட்டதாக சொல்கின்றனர். ஆனாலும் முத்து அது தன்னுடைய அம்மாதான் என்று சொல்லாமல், "வயதான அம்மா பிழைத்துப் போகட்டும்" என்று சொல்லி அங்கிருந்து செல்கிறார். இதுவே இன்றைய எபிசோடின் சாரம்.

Advertisement

Advertisement